இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனன் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.
பகவத் கீதை மிகவும் பிரபலமான மற்றும் இந்து மத நூல்களில் மிகவும் செல்வாக்கு மிக்க நூல் ஆகும். இந்து மதம் அதன் பன்முகத்தன்மை மற்றும் அதன் தொகுப்புக்காக அறியப்பட்டாலும், பகவத் கீதை ஒரு தனித்துவமான அனைத்து சமய ஹிந்துக்களும் ஏற்கும் செல்வாக்கைக் கொண்டுள்ளது.இந்தியவியலாளரும் பாரம்பரிய இந்து தத்துவ அறிஞருமான ஜெரால்ட் ஜேம்ஸ் லார்சன் “ஒரு இந்துவாக இருக்க வேண்டும் என்பதன் முழுமையை உள்ளடக்கியதாக ஏதேனும் ஒரு உரை இருந்தால், அது பகவத் கீதையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.