குடும்பத்தில் ஏதாவது பிரச்னைகள் எழுமானால் குடும் பத் தலைவன் முயன்று அந்தக் குடும்பத்தில் நிம்மதி நிலவச் செய்வதைப் பார்க்கிறோம். நாட்டில் அரசியல் பிரச்னை களோ கொந்தளிப்போ எழுமானால் நாட்டுத் தலைவர்களும் அரசாங்கமும் தலையிட்டு அதனை அடக்குவதைக் காண்கி றோம். யுகதர்மம் சீர்குலைந்து உலகத்துக்கே உபாதை ஏற்ப டின் யார் தீர்த்து வைக்க முடியும்?
தெய்வத்தினால் மட்டுமே அது இயலும். தெய்வம்தான் மனித வடிவமெடுத்து நாயன்மாராகி உலகத் துன்பங்களைத் தீர்க்க முடியும்.
இன்று அவதார புருஷராக- நாயன்மாராக- உலக குரு வாக ஒளிரும் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள்தாம் குடும்பத்துக் கும், நாட்டுக்கும், உலகுக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்கு – சங்கடங்களுக்கு மார்க்கம் சொல்ல வல்லவர்களாக, துன்பத் தைப் போக்க வல்லவர்களாகத் திகழ்கின்றார்கள்.