॥ சூர்யசதகம் ॥
தெய்வங்கள் பற்றி சம்ஸ்கிருத
மொழியில் வந்துள்ள
இலக்கியங்கள் ஏராளம்.
வேறு எந்த நாட்டிலும்
இத்தனைத் துதிப்பாடல்களை
நாம் காணவியலாது.
அங்கனம் தோன்றியுள்ள
தோத்திர இலக்கியங்களில்
கடவுளே உன்னைப்
போற்றுகின்றேன்.
என்னைக் காப்பாற்று
என்ற முறையில்
புனையப்பட்டவைதாம்
பெரும்பாலும் உள்ளன.
கவிநயமும், கருத்தாழமும்
கொண்ட நூல்கள் சில நூறு
நூல்கள்தாம் கிடைக்கின்றன.
அவற்றிலெல்லாம் பொதுவாக
ஆதார கருதியாக
அமைந்த கருத்து ஒன்றுண்டு.
பரம்பொருள் என்ற ஒன்று,
என்றுமே உள்ளது.
அது இல்லாத நேரமோ,
இடமோ கிடையாது.
அதற்கு உருவமே கிடையாது.
அது சர்வ வல்லமை பெற்றது.
எல்லாம் அறிந்தது.
அறிவே அதன் வடிவம்.
அது தானாக இயங்கி
உலகமாக விரிந்தது.
எங்கும் ஊடுருவி நிற்கிறது.
ஆயினும் உலகில் ஒட்டாதது.
அதன் சக்தி உலக
இலக்கத்தை ஒரு நெறியோடு.
ஆட்டிப் படைக்கிறது.
அருவமான (அருபமான).
அந்த சக்தி பல சக்திகளாக
விரிகிறது என்று.
உதாரணமாக,
‘மின்சாரம்” என்பது
பொதுவானதொரு “சக்தி”.
அது பல்பில் (Bulb)
ஒளியாக விளங்குகிறது.
மின்விசிறியின்வாயிவாகக்
காற்றை வீசுகிறது. இயந்திரத்தின்
அமைப்புக்கு ஏற்றவாறு விசையாகிப்
பற்பல வேலைகளைச் செய்கிறது.
சில இயந்திரங்களில் மிகப்
பெரியவைகளில் அதன் சக்தி
அதிகம் உண்டு.
சில நுண்ணிய அமைப்பு களில்கூட
அதிக சக்தியும் உண்டு.
சில பெரிய அமைப்பு களில்
சக்தி குறைந்தும் செயல்படுகிறது.
‘மின்சாரம்’ என்ற ஒரே ‘சக்தி’
இவ்விதம் பலவாறு
செயல்படுவதைப் போல
பரம்பொருள்பல நிலைகளில்,
பல சக்திகளாக மலர்ந்து,
பல சாதனைகளைப்
புரிந்து, ப்ரபஞ்சு ஓட்டத்தைச்
செவ்வனே நடத்திச் செல்கிறது.
இந்த சக்தியைத்தான் தெய்வம்
என்கிறோம். இப்படி நம் முன்னோர்கள்
பரம்பொருளின் சக்தியை பல்வேறு
வகைப்பட்ட தெய்வ வடிவங்களாக,
நமது யோக பலத்தினாலும்,
தபோ பலத்தினாலும்,
ஆத்ம பலத்தினாலும்,
அருவத்தை (அரூபத்தை)
உருவகப் படுத்தினார்கள்.
இக்கருத்தையே
மானிக்கவாசகஸ்வாமிகள்
திருவாசகத்தில் “ஒரு நாமம்
ஒருருவம் ஒன்றுமில்லாற்
காயிரந்திருநாமம்
பாடிநாம் தெள்ளேணங்
கொட்டோமோ” என்று தமிழில்
பாடியுள்ளது சிந்திக்கத்தக்கது.
நமது புலன்களுக்கு அகப்படுகின்ற
(ஐம்பூதங்களின் சேர்க்கையான)
பல வடிவங்களிலுள்ள அதே தெய்வசக்தி
இயங்கி அருள் பாலிக்கிறது.
பௌதிகமாக நமது
புலன்களுக்கு அகப்படுகின்ற
வடிவங்களிலும் பரம்பொருள்
பரவிநிற்கிறது.
இப்படிப்பட்ட பௌதிக
வடிவங்களிலேயொன்று தான் சூரியன்.
சூரியன் என்றபோது ஒன்பது
கோள்களில் ஒன்றாக அன்றாடம்
காலையில் உதித்து
மாலையில் மறைகின்ற
ஒளிக்கோளத்தைத்தான்
நாம் பார்க்கிறோம்.
ஆனால் அந்த ஒளிக்கோனத்திற்கு
அளவற்ற சக்தியை
அருளுகின்ற அதே சமயம்
அதற்கும் அப்பாற்பட்ட
பரம்பொருள்தான் சூரியன்
என்ற தெய்வம்.
(அரூபமான) உருவமற்ற
பரம்பொருளை உருவமான
சூரியனுடைய கோளில் (பிம்பத்தில்)
தெய்வமாக பாவித்து
வழிபடுகிறோம் என்பதுதான் உண்மை.
இதைப் பற்றி விரிவாகப் பேசுகின்ற
வேதங்கள் ஜ்யோதிர்
மண்டலம் என்னும், ப்ரமாண்டமாக
ஐம்பூதத் தொகுப்பாக,
நாம் காணுகின்ற பிரபஞ்சத்தை
மஹாமேரு பர்வதம்
நிலைகுலையாமல் தாங்குகிறது
என்றும், அதைச்
- teluguసూర్య అష్టకం
- punjabiਸੂਰ੍ਯਾਸ਼੍ਟਕਮ੍
- odiaଶ୍ରୀ ସୂର୍ୟାଷ୍ଟକମ୍
- gujaratiસૂર્યાષ્ટકમ્
- kannadaಶ್ರೀ ಸೂರ್ಯಾಷ್ಟಕಮ್
- bengaliশ্রী সূর্য়াষ্টকম্
Found a Mistake or Error? Report it Now